சினிமா செய்திகள்

குடிப்பது பற்றி வெளிப்படையாக சொன்ன பாலகிருஷ்ணா

‘குடிப்பது’ பற்றி வெளிப்படையாக சொன்ன பாலகிருஷ்ணா

09 நவ, 2021 – 13:08 IST

எழுத்தின் அளவு:


Balakrishna-openly-talk-about-drinking-alcohol

தெலுங்குத் திரையுலகத்தில் அதிரடி கதாநாயகன் எனப் பெயரெடுத்தவர் பாலகிருஷ்ணா. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அடிக்கடி எதையாவது அதிரடியாகப் பேசி சர்ச்சையை இழுத்து விடுவார். சமீபத்தில் கூட ஏஆர் ரகுமான் பற்றி அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பாலகிருஷ்ணா ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ‘அன்ஸ்டாப்பபில்’ என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் நானி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாழ்க்கையில் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பது எது என்பதற்கு பதிலளித்துள்ளார். அதில் தனது அப்பா என்டிஆர் படங்களும் தனது அபிமான பிராண்ட் ஆன ‘சரக்கு’ ஒன்றைப் பற்றியும் சொல்லி அவை போதும் எனக்கு கம்பெனி கொடுக்க என்று சொல்லியுள்ளார்.

சினிமா நடிகர்கள் தாங்கள் குடிப்பதைப் பற்றி பொதுவெளியில் பகிர மாட்டார்கள். ஆனால், பாலகிருஷ்ணா இப்படி பகிர்ந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.



Source link

Related Articles

Back to top button