நாளை வெளியாகிறது விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம்

கொரோனா மூன்றாவது அலை காரணமாக தொடர்ந்து பல படங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தன இந்நிலையில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தயார் நிலையில் உள்ள அனைத்து திரைப்படங்களும் வரிசையாக திரைக்கு வருகின்றன அந்த வகையில் விஷால் நடித்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி நாளை வெளியாகிறது வீரமே வாகை சூடும் திரைப்படம்
இந்த திரைப் படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கி மிக வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பெயர் போன விஷால் இந்த திரைப்படத்தில் போலீசாக நடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிய இயக்குனரான சரவணன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகக் குறுகிய நேரத்திலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடித்து இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது இவர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி இரண்டாம் பாகத்தில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் ஆவார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் தனது நடிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக நிறைய பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

பின்னணி இசைக்கு புகழ் பெற்றுள்ள யுவன் சங்கர் ராஜா அவர்களின் பின்னணி இசை ஏற்கனவே டீசர் மற்றும் டிரைலர் இல் இடம்பெற்ற ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டிரைலரில் இடம் பெற்றுள்ள விசில் டீம் அனைவராலும் பாராட்டப் பட்டுள்ளது. அதிரடி திரைப்படங்களுக்குப் பெயர் போன விஷாலின் நடிப்பு மற்றும் அதிரடி காட்சிகளுக்கு இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது