பட்டாசாக வெளிவந்த மகான் டிரைலர்
விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் மகான், இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாக உள்ள நிலையில், இன்று அதன் டிரைலர் வெளியிடப்பட்டது
துருவ் விக்ரம்
தந்தை மகன் நேருக்குநேர் மோதிக் கொள்வது போன்ற காட்சி அமைப்புகளுடன் வெளிவந்த மகன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளிவந்த சிறிது நேரத்திலேயே இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் முதலிடம் பிடித்தது. இந்த திரைப்படத்தை லலித்குமார் தயாரித்து ஒளிப்பதிவாளராக சுரேஷ் கிருஷ்ணாவும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் எடிட்டராக விமர்சனம் பணிபுரிந்துள்ளனர்.

மது ஒழிப்பு போராட்டத்தில் தன் தந்தை சொல்லின் படி ஈடுபட்டுவரும் பள்ளி ஆசிரியராக தொடங்கும் விக்ரமின் கதை பின்னாட்களில் மதுவை குறிவைத்து நடக்கும் கேங்ஸ்டார் அராஜகங்களுக்கு தலைவராக மாறுவது போன்ற காட்சி அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இளவயது விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படத்தின் டீசருக்கு மாறாக இந்த திரைப்படத்தில் தன் தந்தையுடன் மோதும் மகனாக நடித்துள்ளார் துரு விக்ரம்.
பள்ளி ஆசிரியராகவும் விக்ரமிற்கு மனைவியாகவும் நடித்திருக்கிறார் சிம்ரன். சிறந்த நடிகையான இவர் நீண்ட காலமாக சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்காமல் இருந்து வந்தது இந்த திரைப்படத்தின் மூலம் முடிவுக்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாபிசிம்ஹா
கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் வழக்கமாக இடம்பெறும் கதாபாத்திரங்கள் நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெறுகிறார்கள் குறிப்பாக வித்தியாசமான தோற்றத்தில் பாபிசிம்ஹா நடித்துள்ளார். விதவிதமான கெட்டப்புகளில் நடித்து வரும் பாபி சிம்ஹா இந்த திரைப்படத்தில் சொட்டை தலையுடன் சபாரி சூட் அணிந்து நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை 90களில் தொடங்குவது போன்ற காட்சி அமைப்புகள் அதிகம் இடம்பெறுகின்றன குறிப்பாக பள்ளி ஆசிரியராக இளமைத் தோற்றத்துடன் சீக்கிரம் வரும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் அதிகம் இடம்பெறுகிறது மேலும் பாபி சிம்ஹாவுடன் இணைந்து வளர்ந்து வரும் ரவுடியாக விக்ரம் நடந்து வரும் காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

காந்தி சிலையுடன் விக்ரம் இடம்பெறும் காட்சிகள் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையுடன் அந்த காட்சிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நீண்ட நாட்களாக சொல்லிக்கொள்ளும்படியான கதையம்சம் உள்ள படங்கள் கிடைக்காமல் தவித்து வந்தது இந்த திரைப்படத்தின் மூலம் நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளமைத் தோற்றத்துடன் தேங்க்ஸ் டா ரக துப்பாக்கியுடன் அவர் இடம்பெறுவது பார்ப்பதற்கு இளமைக்கால விக்ரமை பார்ப்பது போன்றே உள்ளது.
எப்போதும் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்ரெய்லரில் காண்பிக்கும் காட்சிகளை விட 100 மடங்கு அதிகம் திரைக்கதையில் வேலை செய்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உண்டு அதை இந்த திரைப்படமும் நிறைவேற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது