வீடியோ

மீண்டும் கண்ணும் கண்ணும் கலந்து – சாதனா நடனம்

மீண்டும் கண்ணும் கண்ணும் கலந்து – சாதனா நடனம் :- தங்க மீன்கள் தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாதனா தமிழ் திரையுலகில் வெற்றி படலாகிய வஞ்சி கோட்டை வாலிபன் பட பாடலான கண்ணும் கண்ணும் கலந்து பாடலுக்கு நடனமாடி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார்

வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம் பெரும் இந்த பாடலில் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மினி அவர்களின் போட்டி நடனம் மற்றும் இடையில் ஒலிக்கும் சபாஷ் சரியான போட்டி என்றேன்றும் தமிழ் திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத பாடலாகும்.இந்த பாடலை மீண்டும் நமது கண்முன் அரங்கேற்றி இருக்கிறார் சாதனா ,

தங்க மீன்கள் சாதனா

தங்க மீன்கள் திரைப்படத்தில் இயக்குனர் ராமின் மகளாக நடித்துள்ள இவர், நீண்ட நாட்களாக ம்யூசிக் வீடியோ வெளியிட ஆவலாக இருந்த தாகவும் ,மறைந்த நடிகர் விசு அவர்கள் இந்த பாடலை பரிந்துரை செய்ததாகவும் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார், எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்பது குறிப்பிட தக்கது

Back to top button