மீண்டும் சர்ச்சையில் இளையராஜா
காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய எம் மணிகண்டன் அவர்களின் புதிய திரைப்படம் கடைசி விவசாயி இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு நடித்து வருகின்றனர்
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர் சில நாட்களுக்குப் பிறகு இளையராஜாவுக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இசையமைப்பாளர் சங்கத்தில் புகார்
இதன் காரணமாக இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான தீணாவிடம் இளையராஜா புகார் அளித்ததாக கூறப்படுகிறது இதுதொடர்பாக சீனாவிடம் கேட்டபொழுது இளையராஜாவுக்கும் கடைசி விவசாயி பட குழுவினருக்கும் இடையே பிரச்சினை இருப்பது உறுதிசெய்யப்பட்டது
இந்த நிலையில் கடைசி விவசாயி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இளையராஜாவுக்கும் படக்குழுவினருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை சுமூகமாக தீர்வு காணப்பட்டதாகவும் இந்த பிரச்சனை இத்துடன் முடிக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்
இந்த திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே இளையராஜா இசை அமைத்த பின்னணி இசையோடு வெளிவந்து வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது