சினிமா செய்திகள்புதிய படங்கள்

மீண்டும் பிஸியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்பட குழுவினர்

 நீண்ட டைட்டில் போராட்டத்திற்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்ட வடிவேலுவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து விடுபட்டதாக இருவரும் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பாடல் ஒலிப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதை வடிவேலு அவர்கள் உறுதி செய்தார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணியாற்றுவது அனைவரும் அறிந்ததே குறிப்பாக இந்த படத்திற்காக அவர்  லண்டனில்வேலை பார்ப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

 மீண்டும் லண்டன் சென்றுள்ள வடிவேலு மற்றும் இசை அமைப்பாளர் இணைந்து வெளியிட்ட புகைப்படத்தில் இயக்குனர் சுராஜ் இடம்பெற்றுள்ளது

 லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல் பதிவு செய்யும் பொழுது உடன் வடிவேலு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக தனது படங்களில் ஏதாவது ஒரு பாடல் பாடும் வடிவேலு இந்தப் படத்திலும் பாடல் பாடியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு சமூக வலைத்தளங்களில்பெரிய ஆவலை தூண்டியுள்ளது லைக்கா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button