Abdul Kalam Essay in Tamil – அப்துல் கலாம் கட்டுரை

Abdul Kalam Essay in Tamil – அப்துல் கலாம் கட்டுரை :- அப்துல் கலாம் உலகளவில் புகழ்பெற்ற பெயராகும் , இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாக பொருப்புவகித்த இவர் தமிழகத்திற்கும் ,இந்தியாவிற்கும் பெருமை சேர்பித்தார் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO மற்றும் அணு ஆராய்ச்சி குழுமத்தில் இவர் செய்த சாதனைகள் மிக பெரிய சாதனைகள் ஆகும்

தமிழகத்தில் பிறந்த இவர் இளமை காலத்திலேயே வறுமைக்கு தள்ளப்பட்டார் , எப்போதும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத கலாம் தனது படிப்பை தொடர்ந்தார் ,எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தனது படிப்பில் கவனத்தை செலுத்திய கலாம் சென்னை பொறியியல் படிப்பை தொடர்ந்த இவர் ,மிக விரைவில் இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னணி விஞானியாக பொறுப்பெடுத்துக்கொண்டார்.1998 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்குகொண்ட இவர் இந்தியாவிற்கு மென்மேலும் பெருமை சேர்த்தார்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி மட்டுமல்லாது அக்னி ப்ரித்வி போன்ற ஆயுதங்களில் இவரது பங்கு அதிகமாக இருந்தது
தனது கடமையை செய்து முடித்துவிட்டு தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ,அணைத்து மாணவர்களையும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று நேர்காணல் மற்றும் அறிவுரை வழங்கினார் , அதன் பின்னர் இந்திய அரசாங்க ஜனாதிபதியாக உயரும் வாய்ப்பும் இவரை தேடிவந்தது . தொடர்ந்து இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளையும் செய்ய தவறவில்லை கலாம்
இவரது சுயசரிதையான அக்னிச்சிறகுகள் தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது இந்திய இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் சிறந்த புத்தகமாக அங்கீகரிக்க பட்டுள்ளது
2015 இல் ஒரு மாணவர் சந்திப்பில் இவரது உயிர் பிரிந்தது
One Comment