புதிய படங்கள்

அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது திரைப்படம்

 போனி கபூர் தயாரிப்பில் அஜித் மற்றும் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைபடம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது.

 பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை திரைப்படம் தொடரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் அஜித்தின் புதிய திரைப்படத்தை என் பேச்சு வினோத் அவர்கள் இயக்குவது தொடர்பான முந்தைய திரைப்பட பணிகள் தொடங்கிவிட்டதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த திரைப்படத்தை பற்றி வினோத் அவர்கள் ஏற்கனவே சில விஷயங்களை தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் இன்று இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையை பற்றி இந்தப் படம் இருக்கும் என்பதும் குறைவான ஆக்சன் காட்சிகளும் நிறைவான வசனங்களும் இந்த திரைப்படத்தில் இருக்கும் என்பது அவர் குறிப்பிட்ட செய்தியாகும்

  கொரோனா மூன்றாவது அறை தொடர்ந்து வீசிவரும் காரணத்தினால் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு ஏற்படும் நிலை அதிக அளவில் உள்ளது. இந்த நேரத்தில் புதிய திரைப்படத்தின் வேலைகளை தொடங்கியுள்ள இந்த கூட்டணி உடனடியாக படப்பிடிப்பு  செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. படத்தின் ஆரம்ப பணிகளை முழுவீச்சுடன் தொடங்கியுள்ள வினோத் அவர்கள் முந்தய திரைப்படம் எடுத்துக்கொண்ட கால அளவை விட மிகக் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை தயாரித்து வெளி விடுவாரா என்ற கேள்வியும் திரைப்பட ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வலிமை அப்டேட்

 சென்றமுறை வலிமை திரைப்படத்திற்கான புதிய செய்திகளை அவ்வளவாக வெளியிடாமல்  படத்தைப் பற்றிய செய்திகள் அதிகம் கசியாமல் இந்த திரைப்பட குழுவினர் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் கேட்டனர். திரைப்படத்துறை அல்லாத இடங்களிலும் இவர்கள் செய்த விஷமத்தனத்தை கருத்தில் கொண்டு புதிய திரைப்படத்தின் செய்திகளை அவ்வப்போது வெளியிடுமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தக் கூட்டணி கருத்தில் கொள்ள வேண்டும்

Related Articles

Back to top button