புதிய படங்கள்

அண்ணாத்த திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை

அண்ணாத்த திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை : – சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கு உள்ள அண்ணாத்த திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர் நீதி மன்றம்

இணையத்தில் புதிய பாடங்களை வெளியிடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது .சன் டிவி நெட்ஒர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு அண்ணாத்த திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது .

இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக சன் டிவி அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது,மனுதாரர் சார்பாக படத்தை இணையத்தளத்தில் வெளியிடும் தளங்கள் மூலமாக பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அண்ணாத்தே திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியிடப்படுவது குறிப்பிட தக்கது

Related Articles

Back to top button