பிரபலங்கள்

Bharathiyar Essay in Tamil – பாரதியார் கட்டுரை

Bharathiyar Essay in Tamil – பாரதியார் கட்டுரை :- தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர்களில் சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். இவரின் தனிப்பெரும் தமிழ் காலையில் உருவான கவிதைகளும் ,கட்டுரைகளுஇந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல்மூட்டின .

Bharathiyar Essay in Tamil

முண்டாசு கவிகன் என எல்லோராலும் அறியப்படுபவர் சுப்ரமணிய பாரதி .எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதிலும் ,வறுமையின் கோரப்பிடியில் தனது குடும்பம் இருந்த போதிலும் தனக்கான பாதையில் பயணித்தார் பாரதி .

ஒரு படைப்பாளி என்ற வட்டத்தில் எப்போதும் பொருட்ன்ஹத பாரதி . சமூக ஆர்வலன், பத்திரிகையாளன், எழுத்தாளன், பாடலாசிரியன், சுதந்திரப் போராட்ட வீரன் என பன்முகத்தன்மைகொண்ட தமிழன், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவரது பங்கை தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் சாமானியர் புரிந்து கொள்ளும் புதுக்கவிதை போன்றவற்றினால் அணுகியதால் இவரை `தேசிய கவி’ எனப் போற்றிப் புகழ்ந்தனர். தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த தமிழ் கவிகன் பாரதியவர்

சின்னசாமி ஐயர் – லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் சுப்ரமணிய பாரதியார். பிறப்பிலேயே தமிழின்பால் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அந்தக் குழந்தைக்கு தமிழ்க் கடவுளின் பெயரான சுப்ரமணியன் என்ற திருநாமத்தைச் சூட்டினர். குழந்தை பருவத்திலேயே தமிழின் மீது இவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு மற்ற படங்களில் செல்லவில்லை

தனது 11 வயதிலேயே அரசவை ஏறி கவிபாடும் திறமை பெற்றிருந்தார் ,எட்டயபுற அரசரின் ஆஸ்தான கவிஞர்களுடன் போட்டியிட்டு அரசரின் வாழ்த்துக்களை பேட்ட பாரதி இளமை வதிலேயே துணைவியாக செல்லம்மாவை கரம்பிடித்தார் (1897).வறுமையின் பிடியில் தனது குடும்பத்தை நடத்திய செல்லம்மாள் ,ஒருபோதும் பாரதியின் கவி பணிகளுக்கு இடையூறாக இல்லாமலிருந்தார்.

தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என பலவேறு மொழிகளின் காவலனாகவும் திகழ்ந்தார். ,ஆங்கிலேய அரசு ஆட்சிக்காலத்தில் `சுதேசமித்திரன்’ என்ற தமிழ் பத்திரிகையில் 1904-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912-ல் தமிழில் மொழிபெயர்த்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள் எனப் பல்வேறு வகையான பாடல்களும் எழுதினார்.

சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் கருத்துகளும் கட்டுரைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை உலகம் முழுக்க பறைசாற்றின. சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையான தமிழில் கவி புனைந்து கட்டுரைகள் எழுதி, மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.

தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் மட்டுமல்லாது, அகில உலக இலக்கிய ஆர்வலர்களின் மூத்த மகனாநார் பாரதி , சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் தமிழ் உலகைவிட்டு பிரிந்தது பாரதி என்கிற சுப்பிரமணியனின் உயிர்.

Related Articles

Back to top button