Uncategorized

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு

உச்ச நடிகர் தனுசும் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் விவாகரத்து பெறுவதாக தெரிவித்துள்ளனர்

தனுஷ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது விவகாரத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தெரிவித்துள்ளனர்

ஜனவரி 17 இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் ,

<blockquote class=”twitter-tweet”><p lang=”und” dir=”ltr”>🙏🙏🙏🙏🙏 <a href=”https://t.co/hAPu2aPp4n”>pic.twitter.com/hAPu2aPp4n</a></p>&mdash; Dhanush (@dhanushkraja) <a href=”https://twitter.com/dhanushkraja/status/1483128992312225792?ref_src=twsrc%5Etfw”>January 17, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

அந்த செய்தியில் கூறியிருப்பதாவது ,18 ஆண்டுகள் நண்பர்களாகவும் ,ஜோடியாகவும் பெற்றோராகவும் நலம் விரும்பிகளாகவும் இருந்துள்ளோம் ,இந்த பயணம் புரிந்துகொண்ட ,வளர்த்தியை கொண்டதாக ,சகித்தி கொள்ளும்படியாக இருந்தது .

இன்று நாங்கள் எங்கள் பாதை பிரியும் இடத்தில நிற்கிறோம் ,ஐஸ்வர்யா மற்றும் நானும் ஜோடி என்ற நிலையில் இருந்து பிரிந்து தனிமனிதர்களாக புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்கிறோம்

எங்கள் இந்த முடிவை தயவுசெய்து ஏற்றுக்கொண்டு எங்களுக்கு தேவையான தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுங்கள்

ஓம் நமச்சிவாய

18 Years of tegetherness as friends,couple,as parents and well wishers to each other.The journey has been of growth,understanding adjusting and adapting.

Today we stand at a place where our paths separate..Aishwaryaa and i have decided to part ways as a couple and take time to understand us as individuals for the better

Please do Respect our decision and give us the needed privacy to deal with this

OmNamashivaaaya!

Spread Love,

D.

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இதில் விவாதிப்பு தேவையில்லை உங்கள் புரிதலும் ஆறுதலும் மட்டுமே தேவை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்

18 ஆண்டு திருமண வாழ்கை

இவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் .தமிழ் திரைப்பட துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகனும் திருமணம் செய்துகொள்வது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது .குறிப்பாக தனுஷுக்கு 21 மற்றும் ஐஸ்வர்யாவுக்கு 23 வயதும் இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது .மேலும் தனுஷ் அவர்களின் அண்ணனான செல்வராகவன் அப்போது திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார் ,வளர்ந்து வரும் நடிகரான தனுஷுக்கு இப்படி ஒரு திருமணம் என்று ரசிகர்களும் செய்தியாளர்களும் அதிக அளவில் இவர்களது திருமணத்தை பற்றி விவாதித்து வந்தனர்

இருந்த போதிலும் தொடர்ந்து இருவரும் நட்புடன் இருந்துவந்தது அனைவரையும் ஈர்த்தது ,தனுஷ் மற்றும் அவரது நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வந்த போதிலும் இந்த ஜோடி பிரியாமல் இருந்தது குறிப்பிட தக்கது .இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது பிரிவை அறிவித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்திருக்கிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Check Also
Close
Back to top button