ஆஸ்கரை வெல்லுமா ஜெய் பீம் திரைப்படம்

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்று ஜெய்பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. சென்ற ஆண்டு சூரரைப்போற்று திரைப்படம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அமெரிக்க திரைப்படங்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து கலாச்சாரம் மற்றும் மொழிகளை இணைந்து நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கு கொள்ள 276 திரைப்படங்கள் தகுதி வாய்ந்தவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆஸ்கர் திரைப்பட விருது விழாவில் உலகில் உள்ள அனைத்து திரைத்துறையினரும் பங்கு பெறுகின்றனர். பிராந்திய மொழி திரைப்படங்கள் என்ற வகையில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு சிறந்த திரைப்படம் என்ற தகுதியை வழங்கிவந்த ஆஸ்கர். சில ஆண்டுகளுக்கு முன்பு பாரசைட் என்ற திரைப்படத்தை சிறந்த திரைப்படமாக வெளியிட தங்கள் ஆஸ்கர் விருது தகுதியை மாற்றி அமைத்தனர். அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படத்தின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று அனைத்து இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பிராந்திய மொழி திரைப்படத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெற்றி பெறுமா அல்லது நேரடியாக அமெரிக்க திரைப்படங்களுக்கு போட்டியாக அமைந்தது ஆஸ்கரை வெல்லுமா என்று எதிர்பார்க்கும் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது
ஜெய் பீம் திரைப்படம் வெளியான நாள் தொட்டு ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களும் வெகுவாக பாராட்டுதலை அளித்து வருகின்றனர் குறிப்பாக இந்திய அரசியல் தலைவர்களும் இந்திய திரைப்பட மேதைகளும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். கடந்த வாரம் ஆஸ்கர் யூட்யூப் தளத்தில் இந்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றது தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை தூண்டியது குறிப்பிடத்தக்கது ஐஎம்டிபி திரைப்பட ரேட்டிங் இணையதளத்தில் அதிக ஓட்டுகளைப் பெற்று முன்னணியில் உள்ள ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என்ற ஆவலே தமிழ் திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய திரைப்பட ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது