பிரபலங்கள்

Kalaingar M Karunanithi Essay in Tamil மு கருணாநிதி கலைஞர் கட்டுரை

Kalaingar M Karunanithi Essay in Tamil மு கருணாநிதி கலைஞர் கட்டுரை :- தமிழக அரசியலில் மிக நீண்ட காலம் இருந்த கலைஞர் என எல்லோராலும் போற்றப்படும் மு கருணாநிதி தமிழநாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்துள்ளார்.ஜூன் 3 1924இல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்தார்.அங்கு பள்ளி படிப்பை தொடர்ந்த இவர் அங்கேயே நாடகம் ,கவிதை ,இலக்கியம் புனைய ஆரம்பித்துவிட்டார்.

இளமை காலம்தொட்டு அரசியலில் இருந்த ஆர்வம் காரணமாக மாணவரமைப்பை ஏற்படுத்தி அதற்க்கு தலைமை தாங்கினார்.முதன் முதலாக கல்லக்குடி போராட்டத்தில் பங்குபெற்ற இவர் ,தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்குபெற்று சிறை சென்றார்.

தனக்கிருந்த எழுத்தார்வத்தின் காரணமாக தமிழ் திரைப்பட துறையில் நுழைந்த கருணாநிதி ,பல படங்களுக்கு கதை ,வசனம்,பாடல் வரிகள் எழுதியுள்ளார் .மிகவும் விரசித்திபெற்ற பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு இவர் எழுதிய வசனங்கள் மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தன,பின் நாட்களில் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டாலும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதும் பணியை தொய்வில்லாமல் செய்துவந்தார்

திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கருணாநிதி 1957 இல் முதன் முதலாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ,1960 முதல் அதன் பொருளாளராக இருந்தார் , தொடர்ந்து கட்சிக்காக உழைத்த கருணாநிதி 1969 இல் திமுக வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பதிமூன்று முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1967இல் திமுக சார்பாக திரு அண்ணாதுரை அவர்களின் தலைமையில் அமைந்த சட்டப்பேரவையில் பொதுப்பணி அமைச்சராக பங்குபெற்றார், அண்ணாதுரை அவர்களின் மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் போட்டியாளராக தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி 1969,1971,1989,1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல்வரானார்.

திரைப்படம் அல்லது இவரது எழுத்து படைப்புகளான ரோமாபுரி பாண்டியன் ,தென்பாண்டி சிங்கம் ,பாயும்புலி பண்டாரக வன்னியன் ,பொன்னர் போன்ற நூல்கள் ,தமிழக இலக்கிய எழுத்துக்களுக்கு முன்னோடியாக தற்போதும் இருந்துவருகின்றன.மேலும் இவரது திருக்குறள் ,சங்க தமிழ் ,தொல்காப்பியப்பூங்கா போன்ற உரை நூல்களும் பிரசித்தி பெற்ற படைப்புகளாகும்

வயதான காலத்தில்கூட அரசியல் ,இலக்கியம் ,எழுத்து என்று தனது பணியை தொடர்ந்து செய்து வந்த கருணாநிதி ,நடக்க முடியாத முதிர் காலத்தில் கூட சக்கர நாற்காலியின் உதவியுடன் அணைத்து அரசியல் கூட்டங்களிலும் பங்கு பெற்றார் ,இறுதியாக ஆகஸ்ட் 7 2018 இல் கருணாநிதி காலமானார்

Related Articles

Back to top button