பிரபலங்கள்

Kamarajar Essay in Tamil – காமராஜர் கட்டுரை

Kamarajar Essay in Tamil – காமராஜர் கட்டுரை :- காமராஜர் தமிழகத்தை சேர்ந்த தலைவராவார்,இந்திய பிரதமராக யார் வர வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில இருந்ததால் இவர் , கிங் மேக்கர் காமராஜர் என்று அழைக்க படுகிறார்

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஜூலை 15 இல் குமாரசாமி நாடார்-சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார்.அங்கு பள்ளி படிப்பை தொடர்ந்த காமராஜர் குடும்ப சுமை காரணமாகவும் தனது தந்தையின் மறைவு காரணமாகவும் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது

பின்பு சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட காமராஜர் மிக விரைவில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக்கு வந்தார் ,தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் சிறைக்கு சென்று வந்த பிறகு ,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்தார் ,இந்தியா அடைந்த உடன் தேர்தலில் போட்டியிடு தமிழக முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டார்.

முந்தய ராஜாஜி அவர்களின் ஆட்சியில் கவனிக்காமல் விடப்பட்ட கல்வித்துறையை மேம்படுத்தினார் ,தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராஜர் மிக அதிக அளவில் அரசு பள்ளிகளை தொடங்கினார் , அதற்க்கு அதிகம் அரசு கஜானாவில் இருந்து பணம் செலவிட முடியாது என்ற காரணத்தினால் , அரசு உதவி பெரும் பள்ளிகள் என்ற பிரிவில் ஓவ்வொரு ஊரிலும் உள்ள செல்வந்தர்களுடன் இணைந்து பள்ளிகளை திறந்தார் , மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கு நோக்குடன் மதியஉணவு திட்டத்தையும் தொடங்கினார்

அடுத்தபடியாக தொழிற்துறையில் கவனம் செலுத்திய காமராஜர் ,அரசு தொழிற்சாலைகள் ,தனியார் தொழிற்சாலைகள் ,தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டமைப்பு , தண்ணீர் தேவைக்கு பல அணைகள் என தமிழகத்தை மேம்படுத்தினார்

ஜவாஹர்லால் நேருவுடன் இனைந்து காமராஜர் திட்டமான கட்சி பணிக்கு திரும்பும் திட்டமும் மிக அதிகம் பேசப்பட்டது. நேரு மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பு காமராஜர் வசமே வந்தது.

1975 அக்டோபர் 2இல் மரணமடைந்த காமராஜர் தனக்கென சொத்து எதுவும் சேர்க்காமல் அரசு வழங்கிய சிறிய வீட்டிலேயே வாடகை கொடுத்து தங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

[pt_view id=”3dda0d0hec”]

Related Articles

Back to top button