பேட்டி

லிஜோமோள் ஜோஸ் நடிப்பை கண்டு வியந்தேன் ஹலிதா ஷமீம்

ஹலிதா ஷமீம் தமிழ் திரைப்பட இயக்குநராவார் ,இவர் இயக்கிய சில்லு கருப்பட்டி ,பூவரசம் பீப்பி ,ஏலேய் போன்ற திரைப்படங்கள் கவனம் ஈர்த்தவைகளாகும் .தற்சமயம் புத்தம் புதிய காலை விடியதா என்ற நேரடி ஓடீடீ தொடரில் ஒரு பகுதியை இயக்கி வருகிறார் ,இவர் இயக்கம் பகுதிக்கு loners என்று பெயரிடப்பட்டுள்ளது ,இந்த தொடர் ஜனவரி 14இல் வெளியாக உள்ளது

இவர் இயக்கிய loners பகுதியில் அபிநயா ,அர்ஜுன் தாஸ் ,மற்றும் லிஜோமோள் ஜோஸ் இணைந்து நடித்துள்ளனர் ,குறிப்பாக லிஜோமோள் ஜோஸ் நடிப்பை பற்றி மிகவும் பாராட்டி உள்ளார் ஹலிதா ஷமீம்

லிஜோமோள் ஜோஸ் நடிப்பை ஏற்கனவே செங்கனி கதாபாத்திரத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் கண்டு வியந்துள்ளேன் ,சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும் ,எனது நண்பர்களான டைரக்டர் சசி ,ஞானவேல் ராஜா மற்றும் மணிகண்டன் அவரின் நடிப்பை பற்றி ஏற்கனவே எனக்கு தெரிய படுத்தி இருந்தனர் ,குறிப்பாக மணிகண்டன் தன்னிடம் ஜோஸின் நடிப்பு திறமையை பற்றியும் அவரது கண்டிப்பு பற்றியும் வெகுகாவாக புகழ்ந்ததையும் சுட்டி காட்டினார்

எனது இந்த படைப்பில் அவரை நடிக்க வைக்க அணுகியபோது முதலில் அவருக்கு தொலைபேசி மூலமாக கதையை அனுப்பினேன் ,அதற்கு அவர் ஒரு குறும் படத்தை நடித்து எனக்கு அனுப்பினார் ,அதனை கண்டா எனக்குமெய் சிலிர்த்து விட்டது ,எனக்கு அந்த நிமிடமே இவர்தான் என் கதைக்கு பொருத்தமானவர் என்று உறுதியாக பட்டது ,அதனை தொடர்ந்த படப்பிடிப்பு திரைப்பட வேலைகள் என அவரது நடிப்பை கண்டு வியந்து வந்துள்ளேன்

இந்த கொரோனா காலகட்டத்தில் நடக்கும் திருமணத்தை மைய படுத்தி எடுக்க பட்ட கதை இது இதில் அதிகள் நாயகனும் நாயகியும் இணையவழி உரையாடல் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன இந்த கற்சிகளில் அவர் நடித்து நான் வியந்த இடங்கள் ஏராளம் ,அவர் இன்னும் நிறைய உயரம் எட்டுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது

Leave a Reply

Your email address will not be published.

Back to top button