Uncategorized

வெளியானது மாறன் திரைப்படம் உற்சாகத்தில் மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் இன்று வெளியிட்டுள்ள டீவீட்டில் தனது நடிப்பில் உருவான மாறன் திரைப்படம் வெளியானதை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்

11.03.2022 ஆகிய இன்று தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடீடீ வலைத்தளத்தில் வெளியானது ,இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகள் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் தெரிய படுத்தி வருகின்றனர்,அந்த வகையில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

சத்யா ஜோதி தியாகராஜன் தயாரித்து ,இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் மாறன்,அதிகபட்ச வரவேற்பை பெரும் தனுஷின் திரைப்படங்களுக்கு மத்தியில் மிக விரைவாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியிடப்படுகிறது இந்த திரைப்படம்,

சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் போன்றவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது,மேலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ள மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளதும் , விவாகரத்து செய்தியை வெளியிட்ட தனுஷின் சமீபத்திய படம் போன்ற காரணங்களுக்காக இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

தொடர்ந்து ஓடீடீ

ஓடீடீ வலைத்தளத்தில் சமீபகாலமாக நிறய திரைப்படங்கள் திரைக்கு வராமலேயே நேரடியாக வெளியிடப்பட்டு வருகிறது ,அந்த வகையில் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கிய ஜகமே தந்திரம் நெட்பிலிக்ஸ் தளத்திலும் , ஹிந்தி மற்றும் தமிழில் வெளிவந்த கலாட்டா கல்யாணம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியிடப்பட்டது.

தனுஷை நீண்ட நாட்களாக திரையில் காணமுடியாத ரசிகர்கள் ,மாறன் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்ற ஆவலில் இருந்தனர் ,ஆனால் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக ஓடீடீ வலைத்தளத்தில் வெளியாகும் இன்ற அறிவிப்பை சிலநாட்களுக்கு முன்னதாகவே வெளியிட்டது .இதன்காரணமாக உற்சாகத்தை இழந்துள்ளனர் ரசிகர்கள் ,

மீண்டும் சிலம்பரசன் தனுஷ் சண்டை

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன் ,இவருக்கு எப்போதும் போட்டியாக கருதப்படும் தனுஷின் திரைப்படம் திரையரங்கில் வெளியிடா பட்டாலும் ,தனுஷுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆதரவு அளித்து வருகின்றனர் ,தொடர்ந்து இவர்கள் திரைப்படங்களை வெளியிட தொடங்கினாள் இவர்களுக்குள்ளான போட்டி மீண்டும் களைகட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

Related Articles

Back to top button