பிக் பாஸ் முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல்

பிக் பாஸ் முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல் திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது ,தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்றதில் இருந்து அதிகம் திரைப்பட கதாநாயகனாகும் வாய்ப்புடன் இருந்த முகேன் ராவ் , வெப்பம் திரைப்படம் இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்கும் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்

முகேன் ராவ் நடிக்கும் வேலன்
கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான வேலன் திரைப்படத்தில் ஏற்கனவே நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ,இந்த வேலன் திரைப்படத்தில் பிரபு ,சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர் ,இந்த படத்தில் இடம் பெரும் பாடல் ஒன்றில் முகேன் ராவ் ஒரே டேக்கில் நடனமாடி அசத்தியது சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டை பெற்றது
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது
மதில் மேல் காதல்
ஷீரடி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக திவ்ய பாரதி மற்றும் சாக்ஷி அகர்வாலும் ,உடன் அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது இதன் படக்குழு ,மேலும் கவுதம் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கிறார்
தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டார் முகென்
Excited to share the FIRST LOOK
— Mugen Rao (@themugenrao) December 1, 2021
Of #ShirdiProductionNO2
From the director of "Veppam"@themugenrao @divyabarti2801 @ssakshiagarwal #KPYBala @ShirdiProdn @AlikhanAnjana@nivaskprasanna @goutham_george @editoranthony @muzik247in @DmyCreation @DoneChannel1@CtcMediaboy pic.twitter.com/OfFG50RlLL