மே 20இல் மாமனிதன் ரிலீஸ் – விஜய் சேதுபதி ,சீனு ராமசாமி
மே 20இல் திரைக்கு வருகிறது விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம்

ஜனரஞ்சக திரைப்படங்களை மட்டுமே இயக்கும் சீனு ராமசாமி தற்சமயம் விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் மாமனிதன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்,கொரோனா காலத்திற்கு முன்னதாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைத்து விட்டது.

இருந்த போதும் தொடர்ந்து வெளிவராமல் இருந்த இந்த திரைப்படம் ஓடீடீ எனப்படும் நேரடி வலைதளதில் வெளியாகும் என்று எதிர்பார்க்க பட்டது,ஆனால் தொடர்ந்து செய்திகளில் இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என்று கூறி வந்தார் இந்த படத்தின் தயாரிப்பாளர்,அதன்படி நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வருகின்ற மே 20ஆம் தேதி திரைக்கு வருவதாக சீனு ராமசாமி தெரிவித்தார்.

சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் இது நான்காவது திரைப்படமாகும் ,முன்னதாக தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், மலையாள நடிகை லலிதா ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்,இந்த திரைப்படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.தர்மதுரை திரைப்படத்தை வெளியிட்ட ஆர்கே சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறது.இந்த நிறுவனத்தின் விசித்திரன் திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்க படுகிறது ,இந்த விசித்திரன் திரைப்படத்தில் ஆர்.கே சுரேஸ் நாயகனாக நடித்துள்ளார்