Mylswamy Annadurai -மயில்சாமி அண்ணாதுரை

Mylswamy Annadurai -மயில்சாமி அண்ணாதுரை :- நிலவு மனிதன் என இந்திய மக்கள் அனைவராலும் போற்றப்படுபவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை ஆவர்,

தமிழகத்தில் உள்ள கொத்தவாடியில் 1958இல் பிறந்த இவர்,கோவை பொறியியல் கல்லூரியில் தனது இளங்கலை பொறியியல் படிப்பையும் ,PSG பொறியியல் கல்லூரியில் முதுகலை பொறியியல் படிப்பையும் பயின்றார்.உலகளவில் பிரசித்தி பெற்ற பல்கலை கழகங்களில் டாக்டர் பட்டமும் பெற்றார்
1982 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்கலம் செயல்பாட்டு மேலாளர்பதவியில் இனைந்த இவர் ,மிக குறுகிய காலத்தில் அதன் தலைவராகவும் உயர்ந்தார்,முந்தய காலங்களில் இந்தியாவின் செயற்கை கோல் (IRS (Indian Remote Sensing)-1A, IRS-1B, INSAT (Indian National Satellite System)-2A, and INSAT-2B) செலுத்தும் பணிகளில் பங்கு பெற்றார்
2004 இல் தலைவரான பிறகு நிலவை நெருங்கும் சந்திராயன் 1 சந்திராயன் 2 ஆகியவற்றை முன்னின்று மேற்கொண்டார் . அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தை தொடும் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நடத்தினார்