Top 10

டாப் 10 நயன்தாரா திரைப்படங்கள்

நயன்தாரா தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் இவராவார் .லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டப் பெயருடன் வலம் வரும் இவர் நடித்த அதிகம் வசூல் செய்த முதல் 10 திரைப்படங்களை பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்


அறம் 2017

அறம் 2017 இல் வெளியான இந்த திரைப்படம் நயன்தாராவை நம்பியே எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக நயன்தார நடித்திருப்பார் தண்ணீர் பிரச்சினை காரணமாக கிராமங்கள்தோறும் நடக்கும் கண்ணீர் கதைகளை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கும் இந்த திரைப்படம் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் போராட்டமாக மாறுவது தொடர்பான கதை அம்சமுள்ள திரைப்படம் இதுவாகும் நயன்தாராவுக்கு நல்ல பெயரையும்  விருதையும் பெற்றுத்தந்தது இந்த திரைப்படம்


ராஜா ராணி 2013

ராஜா ராணி 2013ல் வெளிவந்த இந்த திரைப்படம் அட்லி இயக்கிய முதல் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடித்து இருப்பார் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை காகவே மிகுந்த பார் பாராட்டை பெற்றார் நயன்தாரா


ஸ்ரீராமராஜ்யம் 2011

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நயன்தாரா நடித்த ஆன்மீக திரைப்படம் இதுவாகும் இந்த ராமாயண கதையில் சீதையாக நயன்தாரா நடித்து இருந்தார் நயன்தாரா சீதையாக இவர்  நடிப்பதற்கு நிறைய எதிர்ப்புகள் வந்த போதிலும் இந்த திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்து நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது


 நானும் ரவுடி தான் 2015

 இந்த திரைப்படம் தற்சமயம் நயன்தாராவின் காதலர் ஆக இருக்கும் விக்னேஷ் சிவன் அவர்களின் முதல் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார் நயன்தாரா இந்த படத்தில் காது கேளாத வாராக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் நயன்தாரா இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது


பில்லா 2007

அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்து இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத் தந்தது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு பாராட்டுதலுக்கு உள்ளானது


மாயா 2015

திகில் திரைப்படமான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்பட்டது இந்த திரைப்படத்தில் தனியாக திகில் படத்தை தியேட்டரில் பார்க்கும் பெண்ணாக அறிமுகமாகி என் திரைக்கதையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக நயன்தாராவுக்கு அமைந்தது


ஆரம்பம் 2013

அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் விஷ்ணுவர்தன் தயாரிப்பில் இவர் நடித்த இரண்டாவது திரைப்படம் ஆகும் இந்த திரைப்படமும் நயன்தாராவுக்கு நல்ல பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது


 புதிய  நியாயம் 2016

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தமிழிலும் பின்பு டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்க துணிந்த ஒரு பெண் பற்றிய கதை  இதுவாகும் இந்த திரைப்படத்தில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்


தனி ஒருவன் 2015

தமிழில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகும் ஜெயம் படத்தை இயக்கிய மோகன் ராஜா அவர்களின் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி நடித்திருந்தனர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு மைல் கல் ஆகும்


 பாஸ் என்கிற பாஸ்கரன் 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யாவுடன் இணைந்து நயன்தாரா நடித்த காமெடி திரைப்படம் இதுவாகும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றது இந்தப் படத்தின் பாடல்களுக்காக நயன்தாரா மெனக்கெட்டு நடனமாடி இருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது

Back to top button