கிசு கிசு

நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ் என்ற இளைஞர்

தமிழ் திரையுலகில் ஜிவி பிரகாஷ் உடன் அறிமுகமான நிக்கிகல்ராணி அவர்கள் நேற்று அண்ணா சாலையில் உள்ள காவல் நிலையத்தில் தனது வீட்டில் தனுஷ் என்ற இளைஞர் கேமரா மற்றும் தனது ஆடைகளை திருடி சென்று விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு இளைஞரை கைது செய்து களவுபோன பொருட்களை மீட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

 டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கடவுள் இருக்கான் குமாரு மரகதநாணயம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற நபரை தனது வீட்டில் வேலைக்கு சேர்த்துள்ளார். அவரது வீட்டில் வேலை செய்து வந்த அவர் சில தினங்களுக்கு முன்பாக கேமரா போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் விலை உயர்ந்த நிக்கி கல்ராணியின் ஆடைகளை திருடி சென்று விட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்த போலீசார் திருட்டு நடந்தது உண்மை எனவும் அவரிடமிருந்து விலை உயர்ந்த பொருட்களையும் களவு சென்ற உடைகளையும் திரும்ப பெற்றது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற தகவலையும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவும் இளைஞரின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்றும் நிக்கிகல்ராணி தனது வழக்கை வாபஸ் பெறுவதாகவும் கூறப்படுகிறது

Related Articles

Back to top button