என்ன சொல்கிறார் நிதி அகர்வால்

Hero Acting
சமீப காலமாக நிதி அகர்வால் மற்றும் சிலம்பரசன் காதல் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது ,இந்த செய்தி பற்றிய ஆட்செபம் எதுவும் இதுவரை நிதி அகர்வால் கூறாத நிலையில் அவர்நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ‘ஹீரோ’ தெலுங்குப் படத்துக்கான விளம்பர செய்தியாளர் பேட்டியில் தனது கருத்தை பதிவிட்டார் நிதி அகர்வால்
நம்மை பற்றி எதாவது எழுதப்பட்டு கொண்டேதான் இருக்கும் அவற்றில் பல பொய்யான செய்திகளும் சில உண்மையாக செய்திகளும் இடம்பெறுகின்றன ,உண்மை என்னவென்பது எனது பெற்றோருக்கு தெரியும் அது பற்றி வெளிப்படையாக பேசி சமூக வலைத்தளங்களில் செய்தியாக வெளிப்பட விருப்பம் இல்லை ,தொடர்ந்து திரைப்படங்களிலும் அதற்க்கான வேலைகளிலும் ஈடுபடுவதையே விரும்புகிறேன் என்று அவர் தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடந்து நடித்து வரும் நிதி அகர்வால் பற்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் சிம்புவும் இதுவரை எதுவும் சொல்லாதது குறிப்பிட தக்கது.நடிகர் சிலம்பரசனின் வயதுடைய அனைத்து நடிகர்களும் திருமணம் செய்து தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற தகவல்கள் வெளியாகும் போது அனைத்து சமூக ஊடகங்களும் திரும்ப திரும்ப இதை பற்றி பேசி வருவது சாதரண ஒரு செயலக மாறிவிட்டது
இருந்த போதிலும் உண்மை அறியாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து திரைப்பட பணியில் ஈடுபடுவதும் அயராது உழைப்பில் கவனம் செலுத்தும் சிலம்பரசன் மீது ஏற்படும் கவன ஈர்ப்பு வதந்திகளை பரவ விடாமல் தடுப்பது அனைத்து சமூக ஊடகங்களில் பொறுப்பாகும்