புதிய படங்கள்

வெளியானது நூறு கோடி வானவில் படத்தின் டீசர்

வெளியானது நூறு கோடி வானவில் படத்தின் டீசர் :- சிவப்பு மஞ்சள் பச்சை மெகா வெற்றி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சசி இயக்கி வெளிவரும் தமிழ் திரைப்படம் நூறு கோடி வானவில் .

Nooru Kodi Vanavil

தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடித்துள்ளார் ,எப்போதும் காதல் காட்சிகளுக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் தரும் சசி ஹரிஷ் கல்யானை எப்படி கையாண்டு இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது உள்ளத்திலும் எழுந்துள்ளது .

நாயகியாக சித்தி இட்நாணி

இந்த திரைப்படத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசனுடன் நடித்துள்ள சித்தி இட்நாணி கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிட தக்கது .ஏற்கனவே இவர் தெலுகு மற்றும் குஜராத்தி திரைப்படங்களில் குறிப்பிடும்படியான வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,குறிப்பாக தெலுங்கு பிளாக் காமெடி படமான அணுகுன்னாடி ஒக்கடி ஆயினாடி ஒக்கடி திருப்பிடத்திலும் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே

ஹரிஷ் கல்யாண்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமது தகுதியை இழக்காத ஒரே நடிகர் இவராவார் ,அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளான பலர் இன்று இருந்த இடம் இடம் தெரியாமல் போய் விட்டனர் ,தமக்கென்று இருந்த குறைந்த மார்க்கெட்டயும் இழந்து தவிக்கும் அவர்களுக்கு மத்தியில் ,தொடர்ந்து திரைப்படங்களில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து வருகிறார் ,

இவரது திரைப்பட வரிசையில் தொடர்ந்து காதல் படங்களே வந்த வண்ணம் உள்ளன ,ஆனால் இந்த முறை வெறும் காதல் படம் மட்டும் எடுக்காமல் திரைக்கதையில் எதாவது புதுமையை கையாளும் சசி இயக்கத்தில் இவர் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு அதிகம் வரவேற்பு உள்ளது

டீசர் வெளியீடு

பொங்கல் பண்டிகை அன்று இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது ,நாயகியின் பார்வையில் திரைக்கதை என்ற பாணியில் பயணிக்கும் இந்த படத்தின் டீஸர் பக்கா காதல் படமாக உருவாகி உள்ளது தெளிவாக தெரிகிறது .

Related Articles

Back to top button