சினிமா செய்திகள்

ஆஸ்கர் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாக ஜெய்பீம் தேர்வு

#SceneAtTheAcademy என்ற தலைப்பில் உலகில் உள்ள அனைத்து திரைப்பட துறையில் இருந்தும் முக்கிய வெற்றிப்படங்களை தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிர்ந்து வருவது ஆஸ்கர் விருது வழங்கும்  அகாடமியில் வழக்கமாகும் அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியாகி உலக அளவில் அதிக ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிகளை தற்போது தங்கள் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது ஆஸ்கர் அகாடமி

 திரைப்பட ரேட்டிங்கில் ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களின் மதிப்பெண்களின் வழி வரிசைப்படுத்தும் இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் சுருக்கமாக ஐஎம்டிபி என்ற வலைத்தளம் மதிப்பிட்டு வருகிறது அதில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வரும் ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தில் பின்னுக்குத் தள்ளிய தமிழ் திரைப்படமான ஜெய்பீம் இருக்கு இந்த தகுதியை உரியது என்று அனைத்து திரைப்பட ரசிகர்களும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

 ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மணிகண்டன் லிஜோமொள் ஜோஸ் ரஜிஷ விஜயன் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் சென்ற ஆண்டு நேரடியாக ஓட்டிட்டு வலைத்தளமான அமேசான் ப்ரைம் இல் வெளியானது வெளியான நாள் முதலாகவே இந்த திரைப்படத்தை பற்றி அனைவரும்  தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர தொடங்கிவிட்டனர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்கறிஞர் சந்துரு அவர்களின் வாழ்க்கை குறிப்பு அடங்கிய இந்த திரைப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது

ஆஸ்கர் அகாடமியின் சமூகவலைத்தளங்களில் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய குறிப்புகளும் இதற்காக உழைத்த திரைக் கலைஞர்களின் திறமை மற்றும் உழைப்பு பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன இதுவரை உலக மொழிகள் அனைத்திலும் உள்ள சிறந்த திரைப்படங்களின் திரைக் காட்சிகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது ஒரு தமிழ் திரைப்படம் இந்த வகையில் வெளியிடப்பட்டிருப்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது

Related Articles

Back to top button