டிவி செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு தெரிந்த உண்மை அடுத்து என்ன?

23.03.2022 விஜய் டிவியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடும் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.தனக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை மற்றோரு டாக்டரிடம் தெரிந்துகொண்ட முல்லை வீட்டிற்கு வராமல் இருப்பது நேற்றய பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.இந்த நிலையில் இன்று வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னோட்டத்தில் அவரை தேடிப்பிடித்து கதிர் வீட்டுக்கு அழைத்து வருவதுபோன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இன்று விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில்,தனக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதை தெரிந்துகொண்ட முல்லை வீட்டிற்கு செல்லாமல் இருப்பதும் ,ஒரு கோவில் மண்டபத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருக்கும்படியும் காட்சிகள் கட்டப்பட்டது,அவரை தேடி வரும் கதிர் வீட்டில் தேடி பார்த்துவிட்டு மீனாவிடம் உண்மையை தெரிந்துகொண்டு கோவிலில் அவரை சந்திப்பதுமாக தொடர்கிறது.

கோவில் மண்டபத்தில் அழுதுகொண்டிருக்கும் முல்லையை சந்தித்து தனது நிலையை கதிர் எடுத்து சொலிகிறார்,அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்லும் கதிர் அங்கு ,முல்லையின் பெற்றோரும் ,குடும்பத்தினர் அனைவரும் இருப்பதை காண்கிறார் ,தனக்கு குழந்தை பிறக்காது என்று டாக்டர் சொல்லியதை தனது தாயிடம் சொல்கிறார் முல்லை ,இதுபோன்று செல்லும் காட்சிகள் பின்னணியில் கே ஜி எப் படத்தில் இடம்பெறும் அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒலிக்க முடிகிறது

தொடர்ந்து பாண்டியன்ஸ்டார்ஸ் பார்க்கும் ரசிகர்கள் இந்த பிரச்னை ரொம்ப காலமாக தொடர்ந்து வருவதையும் அது இப்பொது முடிவடைவதையும் கண்டு வருகின்றனர் ,அடுத்த பிரச்சனைகளான வீடு கட்டுதல் , கண்ணன் படிப்பு ,மாமனாரின் கடையை பார்க்கும் மருமகன் பிரச்சனைகள் எப்போது முடிவடையும் என்றும் ஆவலாக உள்ளனர்

Related Articles

Back to top button