Uncategorized

Rajini Nelsan Film Announced (Aniruth + Sun Pictures) Thalaivar 169

Rajini Nelsan Film Announced (Aniruth + Sun Pictures) Thalaivar 169 :- ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தயாரிப்பை சன் பிக்சர்ஸ் மேற்கொள்கிறது ,இதற்கான முதல் தகவலை சன் பிக்சர்சின் அதிகார யூடுயூப் சேனலில் இன்று வெளியிட்டது அந்த நிறுவனம்.

இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வர தயாராகி வரும் இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது .இதுபற்றி சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகிவந்த செய்திகளை உறுதி செய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

அனிருத் ரவிச்சந்திரன்

ரஜினி மற்றும் நெல்சன் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ,இன்று வெளியான தகவல் வீடியோவில் நெல்சன் மற்றும் ரஜினியுடன் கோட் சூட் போட்டுகொண்டு இவரும் இடம்பெற்று இருந்தார்.

புதிய தோற்றத்தில் ரஜினி

ரஜினி நடிக்கும் இந்த திரைப்படம் அவரது 169 வது திரைப்படமாகும் ,இந்த திரைப்படத்திற்கும் இன்னும் பெயரிடப்படாத காரணத்தினால் தலைவர் 169 என்று பெயரிட்டு அழைக்க படுகிறது .கபாலி திரைப்படத்தில் மிக ரம்மியமாக கோட் அணிந்து நடித்திருந்த ரஜினி கிட்டத்தட்ட அதே முக தோற்றத்தில் இந்த படத்தில் இடம்பெறுகிறார்.

படத்தின் பிரஸ்ட் லுக் படத்தின் அறிவிப்பின் போதே வெளியிடப்பட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது .

வேறமாறி நெல்சன்

கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து புகழில் உச்சிக்கு செல்ல தொடங்கி விட்டார் நெல்சன் ,தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கும் அவர் ,அந்த படத்தின் ரிலீசுக்கு முன்னே மிகப்பெரிய படமான இந்த திரைப்படத்தில் இடம்பெறுவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது ,இது சமூக வலைத்தளங்களில் வேறமாறி வேறமாறி நெல்சன் என்று போற்ற பட்டு பெறுகிறது

வேறமாறி நெல்சன்

இடம் பெறுவாரா சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்,நெல்சன் மற்றும் அனிருத் இணைத்து உருவாக்கும் பாடல்களுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம் ,முதன் முதலாக இவர்கள் இணைந்து “கோலமாவு கோகிலா” திரைப்படத்தில் இடம்பெறும் “எனக்கிப்ப கல்யாண வயசுதான் வந்துருச்சுடி ” பாடல் மிக பெரிய வெற்றி பாடலாக அமைந்தது

தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தின் பாடலை வெளியிடுவதற்கு முன்பாக இவர்கள் பேசிக்கொள்ளும் வீடியோ ஜனரஞ்சகமாக அமைந்து அனைவரது ஈர்ப்பையும் பெற்றது ,இதனை தொடர்ந்து

விஜய் அவர்களுடன் இவர்கள் உரையாடும் “அராபிக் குத்து ” பாடலின் தகவல் காட்டு தீபோல் பரவி வருகிறது ,சில தினங்களுக்கு முன்பாக வெளியான இந்த வீடியோ சில மணிநேரங்களிலேயே 11 மில்லியன் பார்வையாளர்களையும் ஒரு மில்லியன் லைக்கு களையும் பெற்று சாதனை படைத்தது

தற்போது இந்த புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவாரா ,அந்த பாடல் தயாரிப்பு வீடியோ வெளியிடப்படுமா ,அப்படி இடம் பெற்றால் அதில் ரஜினி இடம் பெறுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது

Related Articles

Back to top button