Sandilyan Essay – சாண்டில்யன் கட்டுரை

Sandilyan Essay – சாண்டில்யன் கட்டுரை :- கல்கிக்கு நிகரான நாவல் எழுத்தாளர்க திகழ்ந்தவர் சாண்டில்யனாவார் வரலாற்று நிகழ்வுகளை தழுவி இவரது நாவல்கள் இருந்தன , வரலாற்று நாயகர்களை முக்கிய பத்திரமாக வைத்து வரலாற்று நிகழ்வுகளோடு காதல் ரசம் சொட்டும் இவரது படைப்புகளுக்கு எப்போதும் அதிக வாசகர்கள் இருந்து வந்துள்ளனர் .

உதாரணமாக இந்தியாவை அடிமையாக்கிய இங்கிலாந்து தளபதி ராபர்ட் கிளைவ் அவர்களை ஒரு கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்டதுதான் ராஜாபேரிகை நாவலாகும் இதில் ராபர்ட் கிளைவ் ஆரம்ப வாழ்க்கை மட்டுமல்லாது , கர்நாடக போர் தலைவர் , திருச்சி போர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை உள்ளடக்கி இருப்பார்
கரிகால் சோழன் வரலாற்றை நேரடியாக எழுதாமல் வேறு ஒரு கதாநாயகன் கதையில் லாவகமாக எப்படி கரிகாலன் என்ற பெயர் உருவானது என்ற கதையா சேர்த்தி எழுதினார்.
தமிழர்தம் அயல்நாட்டு வாணிபம் பற்றிய வரலாற்று மதிப்பு மிக்க தகவல்களை யவன ராணி என்ற நாவலில் அயல் நாட்டு பெண்ணை கதாநாயகியாக அமைத்து கதை புனைந்திருப்பார் ,
இது போன்ற இவரது நாவல்கள் திரைப்பட திரைக்கதை போன்ற ஒரு தோற்றத்தையும் தவறுவதில்லை,இதன் காரணமாகவே இவரது நாவல்கள் ஒரு திரைப்படம் பார்த்த திருப்தியை தருகின்றன.
சாண்டில்யன் படைப்புகள்
- கடல் புறா (3 பாகங்கள்)
- யவன ராணி (2 பாகங்கள்)
- ராஜ முத்திரை (2 பாகங்கள்)
- விஜய மகாதேவி (3 பாகங்கள்)
- பல்லவ திலகம்
- விலை ராணி
- மன்னன் மகள்
- ராஜ திலகம்
- ஜல தீபம் (3 பாகங்கள்)
- கன்னி மாடம்
- சேரன் செல்வி
- கவர்ந்த கண்கள்
- மலை வாசல்
- ஜீவ பூமி
- மஞ்சள் ஆறு
- மூங்கில் கோட்டை
- சித்தரஞ்சனி
- மோகினி வனம்
- இந்திர குமாரி
- இளைய ராணி
- நீள்விழி
- நாக தீபம்
- வசந்த காலம்
- பாண்டியன் பவனி
- நாகதேவி
- நீல வல்லி
- ராஜ யோகம்
- மோகனச் சிலை
- மலை அரசி
- கடல் ராணி
- ஜலமோகினி
- மங்கலதேவி
- அவனி சுந்தரி
- உதய பானு
- ராஜ்யஸ்ரீ
- ராஜ பேரிகை
- நிலமங்கை
- சந்திரமதி
- ராணா ஹமீர்
- அலை அரசி
- மலை வாசல்
- கடல் வேந்தன்
- பாலைவனத்துப் புஷ்பம்
- சாந்நதீபம்
- மண்மலர்
- மாதவியின் மனம்
- பல்லவ பீடம்
- நீலரதி