சினிமா செய்திகள்புதிய படங்கள்

விவேக்கின் கடைசி படமான அரண்மனை 3 வருத்தத்தில் சுந்தர் சி

அக்டோபர் 14இல் வெளியாக விருக்கும் அரண்மனை 3 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது

நடிகர் விவேக் அவர்களின் கடைசி படமாக இந்த படம் இருக்கும் என்று கனவிலும் நினைத்தது கிடையாது ,தங்களுக்கு எப்போதும் உடற்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் வித்தைகளை பகிர்ந்து கொண்டே இருந்த ஒருவர் அகால மரணமடைந்தது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகுந்த மன உளைச்சலை தந்ததாகவும் கூறினார் ,கடந்த ஆண்டு கோரோனோ இரண்டாவது அலை பாதிப்பின்போது விவேக் அவர்கள் மரணமடைந்தது அணைத்து தரப்பனாரையும் மிக அதிக வருத்தத்தில் ஆழ்த்தியது .

விவேக் அவர்கள் நிறைய திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்ததில் முழுமையாக நடித்து முடித்து ,மற்ற திரைப்பட வேலைகளையும் முடித்ததது இந்த திரைப்படம் மட்டுமே .இன்னும் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் நடித்து முடித்திருந்தாலும் அவற்றால் அந்த திரைப்படங்களில் எந்த பயனுமில்லாததால் இந்த அரண்மனை திரைப்படம் விவேக்கின் கடைசி திரைப்படம் என்ற பெயரை பெறுகிறது

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப்பட நிறுவனமான ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது

இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா ,ராசி கண்ணா ,மனோபாலா ,கோவைசரளா ,யோகி பாபு ஆகியோர் விவேக்குடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button