மீண்டும் தாமதமான அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ ரிலீஸ்

மீண்டும் தாமதமான அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ ரிலீஸ் :- தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி படமான ‘நின்னு கோரி’ தமிழ் ரீமேக் ஆன இந்த திரைப்படத்தை பல முறை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்தும் மீண்டும் மீண்டும் எழும் புது பிரச்சனைகள் காரணமாக இந்த முறையும் இதன் வெளியீட்டு தேதி தள்ளி வைக்க பட்டது .
இந்த திரைப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார் ,மேலும் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
டிசம்பர் 3
அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்க பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.கடைசியாக டிசம்பர் 3இல் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்க பட்டிருந்தது ,ரிலீஸ் தேதிக்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக இந்த திரைப்படம் தள்ளி போவதாக இதன் படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்
ஓ டி டி யில் வெளியிடப்படுமா
சமீபத்திய காலங்களில் தொடர்ந்து இழுபறியில் இருக்கும் திரைப்படங்களும் ,சுமாரான படைப்புகளும் தொடர்ந்து ஓ டி டி வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன ,இருந்த போதிலும் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் கிராக்கி இருக்கத்தான் செய்கிறது.சுமாரான திரைப்படங்கள் கூட ஒரு வாரத்திற்கும் அதிகமாக திரை அரங்குகளில் ஓடுகின்றன .இந்த வரிசையில் திரை அரங்கில் வெளியிடப்படுமா அல்லது நேரடியாக ஓ டி டி யில் வெளியிடப்படுமா என்ற ஆவலும் எழுந்துள்ளது