டாப் 10 ஜெயம்ரவி திரைப்படங்கள்

ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம்ரவி ஆவார் அதிக படங்கள் தனது அண்ணனின் இயக்கத்தில் நடித்து வந்த இவர் தற்சமயம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் கதாநாயகனாக வலம் வருகிறார் அவர் நடிப்பில் உருவான திரைப்படங்களில் முக்கிய 10 திரைப்படங்களை பற்றி இந்த பகுதியில் நாம் காணலாம்
தனி ஒருவன் 2015

பிறமொழி திரைப்படங்களை மொழிமாற்று செய்துவந்த மோகன் ராஜா அவர்களின் சொந்த கதை திரைக்கதை மூலம் வெளிவந்த திரைப்படம் இதுவாகும் தீமையை எதிர்த்துப் போராடும் காவல் அதிகாரி வேடத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் மிக ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த்சாமி நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இந்த திரைப்படத்தின் திரைக்கதை அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை லாவகமாக பேசிய இந்த திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2004

குத்துச்சண்டை வீரராக ஜெயம் ரவி நடித்த திரைப்படம் இதுவாகும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நதியா தமிழ் திரைப்பட நடித்த திரைப்படம் இதுவாகும் நதியா உடன் இணைந்து அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தியிருந்தார் ஜெயம் ரவி அதிரடி சண்டை காட்சிகள் மூலம் இந்த திரைப்படம் வெற்றி படமாக மாறியது
அடங்கமறு 2018

2018 ல் வெளிவந்த இந்த திரைப்படம் நேர்மையான காவல் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்து வெளியான திரைப்படமாகும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்து இருந்தார் உண்மை சம்பவங்களின் கோர்வையாக இந்த படத்தை காணலாம்
சந்தோஷ் சுப்பிரமணியம் 2008

தந்தையின் கட்டுப்பாடுகள் இருக்கும் இளைஞனின் கதை இதுவாகும் இந்த திரைப்படத்தில் இவருக்கு தந்தையாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா தனது பாங்கான நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் குடும்ப உறவுகள் பற்றிய இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றிப் பாடல்களாக அமைந்தது
பேராண்மை 2009

எஸ்பி ஜனநாதன் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ஜெயம்ரவியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய திரைப்படமாகும் காட்டு இலாகா அதிகாரியாக இருக்கும் ஜெயம் ரவி இந்திய விண்வெளி வெற்றியை தடுக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளை மாணவிகளின் குழுவைக் கொண்டு தடுத்து நிறுத்துவதே இந்த திரைப்படத்தின் கதையாகும்
கோமாளி 2019

மிக நீண்ட நாட்கள் கோமாவில் இருக்கும் ஒருவன் இன்றைய காலகட்டத்தில் கோமா தெளிந்து வெளிவருவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது இன்றைய அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்துவரும் அதீத செயல்களை நறுக்கென்று வசனங்களால் உணர வைத்தது இந்த திரைப்படத்தின் வெற்றியாகும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார் இவருக்கு நண்பனாக யோகிபாபு நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்
போகன் 2017

கூடுவிட்டு கூடுபாயும் சக்தி பெற்ற வில்லனை அடக்கி வெற்றி பெறும் காவல் அதிகாரியின் கதை இதுவாகும் திரைக்கதையில் நாயகன் உடம்பில் வில்லன் இடம்மாறி செய்யும் வில்லன் செயல்கள் ஜெயம் ரவிக்கு நல்ல நடிப்புக்கு உதாரணமாக அமைந்தது வில்லனாக நடித்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அரவிந்த்சாமி இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார்
ரோமியோ ஜூலியட் 2015

காதல் திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பெறுவது இந்த திரைப்படமாகும் தன்னை பணக்காரன் என்று நினைத்து காதல் செய்து பின்பு பிரியும் கதாநாயகியை உண்மையை புரிய வைத்து உலக நடப்புகளை அறிய வைத்து மீண்டும் கரம்பிடிக்கும் நாயகனின் கதை இதுவாகும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றிப் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது
மிருதன் 2016

தமிழில் வெளிவந்த முதல் ஜாம்பி திரைப்படம் இதுவாகும் போக்குவரத்து காவலர்கள் ஜெயம் ரவி நடித்து இருந்தார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து இருந்தார் இந்த திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார்
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006

வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் கலாச்சாரம் உடைய பெண்ணை காதல் திருமணம் செய்யலாமா வெளிநாடுவாழ் இந்தியனின் கதையாகும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு நடித்து அசத்தியிருப்பார் விவசாயத்தின் உண்மை நிலையையும் அதன் கஷ்டங்களையும் உலகுக்கு எடுத்துரைக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே தெலுங்கில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் தழுவலாக இந்த திரைப்படத்தையும் இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார்