Top 10

டாப் 10 சூர்யா  திரைப்படங்கள்

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா  நடித்து வெளிவந்த திரைப்படங்களில் மிக முக்கிய முதல் 10 திரைப்படங்களில் இந்த கட்டுரையில் நாம் காணலாம்


 சூரரை போற்று 2020

உண்மையும் நிகழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் சூர்யா திரைப்படம் வரலாற்றில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது நெடுமுடி ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் மிக உன்னத நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சூர்யா அதிகம் பாராட்டுகளைப் பெற்றார்  விமான போக்குவரத்தில் முன்னேறத் துடிக்கும் இளைஞனின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் 2020 நேரடியாக அமேசான் ப்ரைம் வலைத்தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது


ஜெய் பீம் 2021

 ஜெய் பீம் 2021

மலைவாழ் மக்களின்  சட்ட பிரச்சினையைக் கையாளும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார்  பழங்குடியினர் காவல்துறையின் கெடுபிடிகளால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்து இந்த திரைப்படம் சூர்யாவுக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது உலகளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் ஐஎம்டிபி வலைத்தளம் இந்த திரைப்படத்திற்கு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் பாராட்டுகளை பெற்றுள்ளனர்


வாரணம் ஆயிரம் 2008

சூர்யாவின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய திரைப்படம் இதுவாகும் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் சூர்யா நடித்து இருந்தார் முதன்முறையாக தமிழ் திரைப்பட உலகில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தி  அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சூர்யா இந்த திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் சமீர ரெடி இவருக்கு நாயகியாக நடித்து இருந்தனர் இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது


 நந்தா 2001

 சுமாரான அறிமுகத்துடன் திரைப்பட உலகில் வலம் வந்த சூர்யா முன்னணி நாயகனாக மாறி அது இந்த திரைப்படத்தில் தான் இயக்குனர் பாலா அவர்களின் இரண்டாவது திரைப்படமான இந்த திரைப்படம் இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும் நடிப்பிற்காக சூர்யா பேசப்பட்டது இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இந்த திரைப்படத்தில் இவருக்கு நாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தில் நடித்து கருணாஸ் அவர்கள் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது


24 2016

24 2016

 2016 இல் வெளிவந்த அறிவியல்  திரைப்படமான இது மிகப் பெரிய வெற்றிப் படமாக இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி இருந்தார் இந்தப் படத்தில் அதிரடி வில்லனாக சூர்யா நடித்து இருந்ததும் அனைவரது பாராட்டை பெற்றது இந்த திரைப்படத்தில் மூன்று வேடத்தில் சூர்யா நடித்து இருந்தார் இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்


 கஜினி 2005

 கஜினி 2005

 ஏ ஆர் முருகதாஸ் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும் குறைந்த சக்தி உடைய நாயகன் வில்லனை பழிவாங்கும் திரைக்கதை கொண்டது இந்த திரைப்படம் ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமன்டோ திரைப்படத்தின் தழுவலாக இந்த படம் இருந்தது தமிழ் ரசிகர்களுக்காக ஏ ஆர் முருகதாஸ் பிரத்தியேக திரைக்கதை அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது பின்னாளில் இந்த திரைப்படம் ஹிந்தி திரையுலகின் முன்னணி நாயகன் அமீர்கான் மூலம் மீண்டும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


காக்க காக்க 2003

காக்க காக்க 2003

போலீஸ் அதிகாரியாக மிடுக்காக சூர்யா நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது இந்தப் படத்தில்தான் கௌதம் வாசுதேவ் மேனன் சூர்யா கூட்டணியில் வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார், அதிபயங்கர  வில்லனாக ஜீவன் இந்த படத்தின் மூலம் அதிக பாராட்டுகளைப் பெற்றார்


அயன் 2009

 கமர்சியல் திரைப்படங்கள் வரிசையில் முன்னணியில் உள்ள பட்டியலில் இடம்பெறும் சூர்யாவின் இந்த திரைப்படம் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே வி ஆனந்தின் திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் தமன்னா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிக முக்கிய பாடல்களாக அமைந்தது விறுவிறு திரைக்கதை கொண்ட இந்த திரைப்படம் அதீத வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது


மௌனம் பேசியதே 2002

மௌனம் பேசியதே 2002

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் சூர்யா திரை உலகில் மிக முக்கிய திரைப்படமாகும் மென்மையான காதல் கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் சூரிய அமைதியாக நடித்திருந்தது அனைவரும் பாராட்டுகளைப் பெற்றது இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக லைலா மற்றும் திரிஷா நடித்து இருந்தனர் இந்தத் திரைப்படத்தில் நடித்த நந்தா அவர்கள் அவரது எளிமையான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது


சிங்கம் 2010

சிங்கம் 2010

  கமர்சியல் திரைப்படங்களை எடுக்கும் ஹரி அவர்களின் திரைப்படம் இதுவாகும் ஜனரஞ்சக திரைப்படங்களில் சூர்யா நடிப்பது அபூர்வமாக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியது நகைச்சுவை கலந்த வில்லன் நடிப்பில் பிரகாஷ்ராஜ் நடிப்பு இந்த திரைப்படத்திற்கு வலு சேர்த்தார் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா செட்டி நடித்திருந்தார்

Back to top button