பிரபலங்கள்

Vairamuthu Katturai – வைரமுத்து கட்டுரை

Vairamuthu Katturai – வைரமுத்து கட்டுரை :- இது ஒரு பொன்மலை பொழுது எனும் திரைப்பட பாடலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் திரைப்பட பாடலாசிரியர் ,கவிஞர் திரு வைரமுத்து அவர்கள் ,பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7முறை வென்றவர் இதுவரை 5000க்கும் அதிகமான திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்

தேனி மாவட்டம் வடுகபட்டியில் பிறந்த இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் இளம்கலை பட்டம் பெற்றார்,கவிதை புனைவதில் வல்லவரான இவர் 1980இல் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் வரும் இது ஒரு பொன்மாலை பொழுது எனும் பாடலை எழுதினார்,இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நூலுக்கு எழுத்து துறையின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

1985 இல் முதல்மரியாதை திரைப்படத்திற்க்காக முதல் தேசிய விருதை பெற்றார் ,தமிழக இசை உலகில் புரட்சிகரமாக அமைந்த ஏ ஆர் ரஹ்மான் முதன் முதலில் மெட்டமைத்த சின்ன சின்ன ஆசை பாடலுக்காக இரண்டாவது முறையும் ,போறாளே பொன்னுத்தாயி என்ற கருத்தம்மா பாடலுக்கு மூன்றாவது முறையும் ,1999 இல் சங்கமம் திரைப்படத்தில் உள்ள முதன் முறை கிள்ளி பார்த்தேன் திரைபாடலுக்கு நான்காவது முறையும் ,ஐந்தாவது முறையாக நெஞ்சில் ஜில் ஜில் எனும் கண்ணத்தில் முத்தமிட்டாள் திரைப்பட பாடலுக்கும் விருதை பெற்றார்

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் வரும் கள்ளிக்காட்டில் பிறந்த தாயே எனும் பாடலுக்கு 2010ழும் ,தர்மதுரை திரைப்படத்தில் எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று என்ற பாடலை எழுதியத்திற்க்காக ஏழாவது தடவையும் தேசிய விருதை வாங்கினார்

தேசிய விருது மட்டுமல்லாமல் அலைகள் ஓய்வதில்லை படத்தின் பாடல்களுக்கும் ,முத்து ,பம்பாய் ,அந்நியன் ,பெரியார் ,தென்மேற்ற்கு பருவக்காற்று போன்ற திரைப்படங்களில் பாடல் எழுதியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார்

Related Articles

Back to top button