சினிமா செய்திகள்

மீண்டும் விஜய் அட்லி கூட்டணி

 தற்சமயம் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துவரும் தளபதி விஜய் அவர்கள் அடுத்தபடியாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிப்பாரா என்ற கேள்வி  தற்சமயம் எழுந்துள்ளது.

 தளபதி விஜய் அவர்களின் புதிய திரைப்படத்தை தில் ராஜு அவர்கள் தயாரிக்க உள்ளதாக ஒப்பந்தமாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தோழா மகரிஷி போன்ற திரைப்படங்களை  இயக்கிய தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீடு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெளியாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு வெற்றிக் கூட்டணியான விஜய் அட்லி கூட்டணி இடம்பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது

 தற்சமயம் இந்தியில் ஷாருக்கான் திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில் மீண்டும் நல்ல செய்தி தமிழக ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் புதிய கூட்டணியை அமைக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த செய்தியின் தாக்கம் காரணமாக தமிழக ரசிகர்கள் மத்தியில் இந்த ஆவல் எழுந்துள்ளது

 இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் விஜய் அவர்களின் 67 ஆவது திரைப்படமாக இருக்கும்

 போட்டி போடும் இயக்குனர்கள்

 இளம் இயக்குனர்கள் வசம் திரும்பியுள்ள நடிகர் விஜய் அவர்களின் புதிய உத்வேகத்தில் வெற்றிமாறன் மகிழ்திருமேனி போன்ற இயக்குனர்களும் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது அட்லியும் இணைந்துள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது அவர்களது இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து அதன் காரணமாக இந்த திரைப்படம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது 

Related Articles

Back to top button