Trailorஓடிடிடிவி செய்திகள்

விஷால் ஆர்யா எனிமி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு?

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தை இருமுகன் ,நோட்டா திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குவதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த திரைப்படத்தின் முதல் புகைப்படமே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,இந்தநிலையில் நேரடியாக ஓடிடி யில் வெளியிடப்பட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கிசு கிசுகின்றன

தொடர் தோல்விக்கு அடுத்து

விஷாலின் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் ஆக்ஷன் மற்றும் சக்ரா மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான நிலையிலும் தொடர்ந்து தோல்வியடைந்ததால் ,நேரடியாக வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது

மிகுந்த எதிர்பார்ப்பு

எப்போதும் இயக்குனருக்கான படம்பார்க்கும் கூட்டம் தமிழகத்தில் அதிக மாகவே உள்ளது ,அதன் அடிப்படையில் இந்த திரைப்படமும் இருமுகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பணியாற்றி இருப்பதால் மிகுந்த அவ்வளுடன் எதிர்பார்க்க படுகிறது

எப்போதும் மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தயக்கம் காட்டாத ஆர்யா இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது இந்த படத்தின் மீது அதிக கவனத்தை கொடுக்கிறது ,இருந்த போதிலும் இது இரண்டு கதாநாயகர் கதையே என்று சமீபத்திய பேட்டிகளில் திரைப்பட குழுவினர் கூறிவருகின்றனர்

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர்

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் ட்ரைலர் அனைவரையும் வியக்கும்படி செய்துள்ளது ,மிகவும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக மிகவும் துரிதமாக வெளியிடப்பட்டது இந்த ட்ரைலர்.கைதி உடையில் ஆர்யாவும் ,போலீஸ் வாகனத்தில் விஷாலும் காட்ட பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை திரைப்பட ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது

பிரகாஷ்ராஜ் மற்றும் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் வெளியாகி உள்ளன

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button