கொரோனா வைரஸில் இருந்து விடுபட விஷ்ணு விஷால்
தனக்கு ஏற்பட்டது ஒமிக்ரான் என்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தில் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சாமானியர் முதல் உலகப் பிரபலங்கள் வரை இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட முன்னணி கதாநாயகர்கள் கதாநாயகிகள் மற்றும் திரைப்படத்துறையினர் அதிகம் பேருக்கு நோய் தொற்று உறுதியாகி வருகிறது
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனக்கு கொரோனா தோற்று உறுதியானதை உறுதி செய்த விஷ்ணு விஷால் அவர்கள் தற்போது வைரசின் பாதிப்பிலிருந்து வெளி வந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். தனக்கு ஏற்பட்டது ஒமிக்ரான் என்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதையும் தனது வலைத்தளத்தின் மூலமாக அவர் பதிவிட்டுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட வைரஸின் பாதிப்பு குறைவான நிலையில் இருந்தபோதிலும் அதன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உடல் வலி சிறிது இருக்கத்தான் செய்கிறது என்றும் மீண்டும் தனது அலுவல்களில் மனதையும் உடலையும் செலுத்த முற்படுவதும் தனது செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்