கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஓடிடியில் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த தகவலின்படி கே.ஜி.எஃப் 2 படமானது பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு 320 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும்

வருகிற மே 27 ஆம் தேதி கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என தெரியவருகிறது.

ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படம் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறதான்.

சினிமா வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, அமேசான் ஓடிடி தளமே கே.ஜி.எஃப் 2 படத்தை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது

இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம் அண்மையில் 1000 கோடியை கடந்தது.