'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு நிறைவு - ஜூனில் வெளியாக வாய்ப்பு

நடிகர் சிம்பு நடித்திருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்

இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையாடா' படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.